ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Sunday 18 November 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 20,525 பட்டதாரி ஆசிரியர்களும், 7,500 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Sunday 11 November 2012

உண்மையில் ஆசிரியர் பணி காலியிடங்கள் எவ்வளவு..? ஓர் ஆய்வு..!!

 BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்= 18932

இது முதலில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டபோது செய்தித் தாள்களில் வந்த காலிப் பணியிட விபரமாகும். 

ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 1:40 என்ற மாணவர் விகிதத்தில் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதற்கேற்றாற்போல் பணிநிரவலும் செய்யப்பட்டு அதன் பிறகு காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 6872 மட்டுமே..!! அதுவும் பாட வாரியான காலிப்பணியிட விபரமும் அதில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்- 450
ஆங்கிலம் - 3000
கணிதம் - 50
அறிவியல் - 500
சமூக அறிவியல் - 2872
மொத்தம் - 6872...


தொடக்கக் கல்வித் துறையைப் பொருத்தமட்டில் பதவி உயர்வு மூலம் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டமையால் மொத்த காலிப் பணியிடங்கள் 1000 - யைத் தாண்ட வாய்ப்பில்லை எனத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 


அதுவும் சேலம் போன்ற தகுதித் தேர்வில் மிக அதிகமான தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்  காலிப்பணியிடம் 10-கும் குறைவுதான்.

ஆக எப்படிப் பார்த்தாலும் பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் 8000 வரையே இருக்கக்கூடும்.. 18932 என்பதெல்லாம் ஒருவேளை ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 எனப் போட்டால் சாத்தியமாகக் கூடும். ஆனால் இதுவரை இதற்கான கணக்கீட்டுப் பணியை துறை ரீதியாக அரசு இன்னும் செய்யவில்லை என்பதே உண்மை...!!


அதுவும் இந்த கடைசித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் ஆங்கிலம் மட்டுமே 3000 பேரைத்நெருங்கி இருப்பதாகத் தெரிகிறது. ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர்களைத் தவிர மற்ற பாடத்தில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா...? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!!  

Friday 2 November 2012

இன்று இரவு வெளியிடப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் பட்டியல்

இன்று இரவு 11 மணியளவில் வெளியிடப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் பட்டியல். இதை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான http://trb.tn.nic.in/ -ல் காணலாம்.. 10394 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்விலும் (தாள்-1) , 8849 பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்விலும் (தாள்-2) தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பெற்றோர் பட்டியலை இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெளியிடவிருக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்... முடிவுகளை இந்த வளை தளத்திலும் பார்க்கலாம்...!!!