ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Friday, 19 October 2012

அரசு பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு பெற்றோர் பட்டியல்

அரசு பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு பெற்றோர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

அதன் விபரம்:

   தேர்வு பெற்றோர் பட்டியலுக்கு கிளிக் செய்க

Subject CodeSubjectVacancyEligibleIn-eligibleNo.of candidates selected
12EG01Civil
12
20
4
12
12EG02Mechanical
24
37
13
24
12EG03EEE
13
22
4
13
12EG04ECE
25
42
9
25
12EG05EIE
8
8
11
6
12EG06Computer Science
28
46
11
28
12EG07Production Engineering
6
8
4
6
12EG08Metallurgy
5
5
6
5
12EG09Industrial Technology
8
15
1
8
12EG10Industrical Bio Technology
15
21
13
15
12EG11English
2
4
2
2
12EG12Mathematics
2
3
2
2
12EG13Physics
2
2
2
2
12EG14Chemistry
4
7
3
4
 Total
154
240
85
152

2011-2012 ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல்

2011-2012 ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

                               உங்களின் பெயர் உள்ளதா?

Tuesday, 16 October 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்- தாள்-1 மற்றும் தாள்-2

ஆசிரியர் தகுதித் தேர்விற்க்கான விடைகள் பல இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து கீழே விடைகள் தரப்பட்டுள்ளது.  உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

                                              விடைகள்-தாள்-1

                                             விடைகள்-தாள்-2

Wednesday, 10 October 2012

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.. மாணவரது பிளஸ் டூ மதிப்பெண்கள் முதல் தேர்வு செய்ய எடுத்துக்கொள்ளப் படுகிறது. இதுத் தொடர்பாக அரசாணயையும் வெளியிட்டது தமிழக அரசு...

           அரசாணை-252


பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

 ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

 இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

 அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

 அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அதன் விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

 இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4

Friday, 21 September 2012

தள்ளிப் போகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு..!!

ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

          இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் சென்னை ஐகோர்ட்டில் கூறினார். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 12 September 2012

அதிகாரப் பூர்வமாக தேர்வு தேதி மற்றும் நேரத்தை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்

இன்று அதிகாரப் பூர்வமாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மற்றும் நேரத்தை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம். தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வு மையங்களையும் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம்.

தேர்வு தேதி: 03-0-10-2012
நேரம்: தாள்-1--- காலை 10 மணி முதல் 1 மணி வரை.
               தாள்-2--- மதியம்  2 மணி முதல் 5மணி வரை.

உங்களுக்கான தேர்வு மையம் அறிய இங்கே கிளிக் செய்க..

Thursday, 30 August 2012

2010-2011 ஆம் ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியர் தேர்வு பெற்றோர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

2010-2011 ஆம் ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு பெற்றோர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்..

Please Click here Tentative List of Candidates Selected (DSE)

Please Click here Tentative List of Candidates Selected (Others)

Please Click here Tentative List of Candidates Selected (Minority)

புதுச்சேரி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

புதுச்சேரி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்..

Please Click Here Tentative Provisional List of Candidates Selected - Paper 1


Please Click Here Communal Tentative Provisional List of Candidates Selected - Paper 1

Sunday, 26 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் நடத்தப்படுகிறது-தேர்வு நேரம் 3 மணி நேரமாகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது


.தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.  


மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 


விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.


 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகியுள்ளனர். 17 உடல் ஊனமுற்றோர்களும், 2 கண் பார்வை இல்லாதவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை வழங்கப்படும். தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். இவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.



35 சதவீதம் பெற்றால் பாஸ் ஆசிரியர்கள் கேட்கின்றனர்


ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகம் பேர் 60 மதிப்பெண்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்று எங்களுக்கும் 35 சதவீதம் எடுத்தால் ‘பாஸ்‘ என்று அறிவிக்க வேண்டும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.


முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்


இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி ஷோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஏ.பிருந்தா, சித்ரா இருவரும் 124 மதிப்பெண் பெற்று 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில்கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்ரா 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஷர்மிளா 131 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆர்.பிருந்தாதேவி 117 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் 3 இடங்களையும் 9 பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 3ம் தேதி பள்ளிக்கு விடுமுறை


ஆசிரியர் தகுதி தேர்வில் பெயிலான 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி (செவ்வாய்) காந்தி ஜெயந்தி அன்றும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 30 June 2012

TNPSC-GROUP-IV ஹால் டிக்கெட் தரவிரக்கம் செய்ய..

TNPSC-GROUP-IV மற்றும் GROUP-VIII  ஹால் டிக்கெட் தரவிரக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பை சுண்டி அதில் உங்களின் விண்ணப்ப எண்ணை டைப் செய்து தரவிரக்கம் செய்துகொள்ளவும்.

              TNPSC-GROUP-IV ஹால் டிக்கெட் தரவிரக்கம் செய்ய..

Tuesday, 26 June 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு, தேர்வு மையப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு, தேர்வு மையப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. உங்களின் விண்ணப்ப எண்ணாஇ அடித்து உங்களுக்கான மையத்தை அறிந்துகொள்ளவும்..

உங்களின் தேர்வு மையம் என்ன...?

Wednesday, 20 June 2012

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது..!

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது..! தேர்வெழுதிய முதுநிலைப் பட்டதாரிகள் தங்கள் விடைகளை இங்கே சோதித்தறியவும்..

                  உங்கள் பாடத்திற்கான விடைகளை அறிய...

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரியுரையாளர் தேர்வு விடைகள் வெளியீடு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரியுரையாளர் தேர்வு விடைகள் வெளியிடப்பள்ளது. தேர்வெழுதியோர் தத்தம் பாடங்களுக்கான விடைகளை கிளிக் செய்து சோதித்தறிக..

               உங்கள் விடைகளை சோதிக்க...

அரசு பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு விடை வெளியீடு

அரசு பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

            உங்கள்பாடத்திற்கான விடையறிய....


TRB Results

Home

பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை ஆசிரியர் நியமனம்

பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை ஆசிரியர் நியமனம்(2010-2011கல்வியாண்டு காலியிடம் வைத்து)-தேர்வு பெற்றோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என அறிய..




TRB - Post Graduate Assistant

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Graduate Assistants (Backlog Vacancies) through Employment Registration Seniority for the year 2010 - 11

    1. Query for the Registration Number (Example : 011998M05348)                                
      Registration No.     

 

Home

பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர் நியமனம்-தேர்வு பெற்றோர் பட்டியல்

பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர் நியமனம்(2010-2011கல்வியாண்டு காலியிடம் வைத்து)-தேர்வு பெற்றோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


உங்கள் பெயர் அப்பட்டியலில் உள்ளதா என அறிய
TRB - Post Graduate Assistant

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants through Employment Registration Seniority for the year 2010 - 11

    1. Query for the Registration Number (Example : 1987F05552)                                
      Registration No.     

Please Click here Cut-off Date Certificate Verification for 24.06.2012

 

 

Home

Friday, 8 June 2012

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வில் உங்கள் மதிப்பெண்..?

Result TRB - Post Graduate Assistant



Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Assistant Elementary Educational Officer 2010 - 11


horizontal rule
I. EXAMINATION RESULTS
To query your Result, enter your Roll No.( 11AE 01000000)
(for all the candidates who have written the examination)
                                                      Roll No       


  1. Subject-wise lists of candidates called for Certificate Verification

 
Code

Subject

No.called for CV

AEEOs

11AE 01

TAMIL

3

11AE 02

ENGLISH

4

11AE 03

MATHEMATICS

3

11AE 04

PHYSICS

3

11AE 05

CHEMISTRY

6

11AE 06

BOTANY

4

11AE 07

ZOOLOGY

4

11AE 08

HISTORY

3

11AE 09

GEOGRAPHY

4
   
Total

34