ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Friday 30 December 2011

1152 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்- பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல்

1152 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்- பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் நேற்று தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது...

கட் ஆப் தேதி விபரங்களை பார்க்க...

       கட் ஆப் தேதி விபரங்கள்-நீங்கள் அழைப்பில் உள்ளீரா என சோதிக்க..

Thursday 8 December 2011

710 - தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல்

710 - தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல்

                        பார்வை மற்றும் தரவிரக்கம்

710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு-அரசாணை

710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு-
அரசாணை பார்வை மற்றும் தரவிரக்கம்

நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு-தினகரன்


Wednesday 7 December 2011

710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்த உத்தரவு-07-12-2011- தினமலர்


710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்த உத்தரவு-07-12-2011





தமிழகத்தில் உள்ள 710 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி /  நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10ம் வகுப்புகளைக் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இந்த கல்வியாண்டிலேயே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளாக செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, 710 பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், அலவலகம், ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் பல்வேறு செலவினங்களுக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.58.12 லட்சம் ஒதுக்கப்படும்.
இவற்றில் பல்வேறு இயற்கை/செயற்கை தடை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி, 65 துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறையில் அரசு எடுக்கும் இந்த நவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எவ்விதச் சிரமமும் இன்றி கல்வி பயில வழி வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Friday 2 December 2011

முதுநிலை ஆசிரியர் தேர்வு முறையும் தேர்வின் அடிப்படையே..!

முதுநிலை ஆசிரியர் தேர்வு முறையும் இனி தேர்வின் அடிப்படையே..! அதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது... அதைக்கான பின்வரும் லிங்கிற்கு செல்க...

அரசாணை

இரண்டு கேட்

இனி பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுமுன் இரண்டுத் தேர்வுகளை கடந்தாக வேண்டும்..

1.ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)
2.ஆசிரியர் நியமனப் போட்டித் தேர்வு (TRB)

இதைப் பற்றிய முழு விபரம் இன்றைய(02-12-11)  தினமலர்,  தினத்தந்தி நாளிதழ்களில் வந்துள்ளது.