ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Tuesday 23 October 2012

முதுநிலை ஆசிரியர் புதியதாய் தேர்வு பெற்றோர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

முதுநிலை ஆசிரியர் தேர்வு பெற்றோர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 3063 பேருடன் மேலும் 3219 பேரை தேர்வு செய்து புதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். உங்களின் தேர்வை உறுதி செய்து கொள்ளுங்கள்.. கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி...!!

Friday 19 October 2012

சிறப்பாசிரியர் நியமனம் தேர்வு பெற்றோர் பட்டியல்

சிறப்பாசிரியர் நியமனம் தேர்வு பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வானோர் பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலுக்கு கிளிக்குக

Subject CodeSubjectVacancyEligibleIn-eligibleNo.of candidates selected
12PT01Civil
4
8
0
4
12PT02Mechanical
13
24
3
13
12PT03EEE
3
6
0
3
12PT04ECE
6
12
0
6
12PT05EIE
3
6
0
3
12PT06CSE
5
11
1
5
12PT07Plastic Technology
3
4
7
3
12PT08Chemical Technology
1
2
0
1
12PT09Architectural Assistantship
3
4
2
3
12PT10English
19
40
5
19
12PT11Mathematics
24
52
6
24
12PT12Physics
27
65
3
27
12PT13Chemistry
28
59
16
28
 Total



அரசு பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு பெற்றோர் பட்டியல்

அரசு பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு பெற்றோர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

அதன் விபரம்:

   தேர்வு பெற்றோர் பட்டியலுக்கு கிளிக் செய்க

Subject CodeSubjectVacancyEligibleIn-eligibleNo.of candidates selected
12EG01Civil
12
20
4
12
12EG02Mechanical
24
37
13
24
12EG03EEE
13
22
4
13
12EG04ECE
25
42
9
25
12EG05EIE
8
8
11
6
12EG06Computer Science
28
46
11
28
12EG07Production Engineering
6
8
4
6
12EG08Metallurgy
5
5
6
5
12EG09Industrial Technology
8
15
1
8
12EG10Industrical Bio Technology
15
21
13
15
12EG11English
2
4
2
2
12EG12Mathematics
2
3
2
2
12EG13Physics
2
2
2
2
12EG14Chemistry
4
7
3
4
 Total
154
240
85
152

2011-2012 ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல்

2011-2012 ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

                               உங்களின் பெயர் உள்ளதா?

Tuesday 16 October 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்- தாள்-1 மற்றும் தாள்-2

ஆசிரியர் தகுதித் தேர்விற்க்கான விடைகள் பல இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து கீழே விடைகள் தரப்பட்டுள்ளது.  உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

                                              விடைகள்-தாள்-1

                                             விடைகள்-தாள்-2

Wednesday 10 October 2012

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.. மாணவரது பிளஸ் டூ மதிப்பெண்கள் முதல் தேர்வு செய்ய எடுத்துக்கொள்ளப் படுகிறது. இதுத் தொடர்பாக அரசாணயையும் வெளியிட்டது தமிழக அரசு...

           அரசாணை-252


பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

 ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

 இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

 அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

 அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அதன் விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

 இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4