ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Tuesday, 28 February 2012

முதுநிலை ஆசிரியர் நியமனம்-தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 முதுநிலை ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

                                                    அறிவிப்பு விபரம்


பாட வாரியாக இதற்கான  பாடதிட்டம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தரவிரக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த உள்ளது...  பொறியியல் படிப்பில் இள நிலை (B.E) முடித்தோரும் , பொறியியல் அல்லாத பாடங்களில் முதுநிலைப்படிப்பை முடித்தோரும் இத்  தேர்வை எழுதலாம்.. 32,000 ரூபாய் ஆரம்ப சம்பளம் கொண்ட இந்த பணிக்கு NET, SLET போன்றவை கட்டாயம் கிடையாது..

அதன் விபரம் பின்வருமாறு:

1. விளம்பரம்


2. பிராஸ்பெக்டஸ்


3. பாடத்திட்டம்

Wednesday, 22 February 2012

AEEO தேர்வு ஹால் டிக்கெட் வந்துடுச்சா...?


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணி இடங்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு வரும் ஞாயிறு (26-02-2012) அன்று நடைபெறவிருக்கிறது. அனைத்து மாவட்ட தலைநகரிலும் நடைபெறுகிற இருக்கிறது..

உங்களுக்கான கடவு சீட்டு இன்று முதல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்து வரும் இரு நாட்களில் அனைவருக்கும் அவர்களின் புகைப்படம் தாங்கிய கடவு சீட்டு வந்துவிடும்.. தபால் அலுவலகத்தில் சொல்லி வையுங்கள்... தினம் வரும் தபால்களை மறவாமல் சோதிக்கவும்...!!

வாழ்த்துக்கள்...!!! 

Friday, 17 February 2012

1152 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் மாற்று திறனாளிகளுக்கு - பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் வெளியீடு


 1152 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதில் மாற்று திறனாளிகளுக்கான 198 இடங்களுக்கான தேர்வு பட்டியல் பதிவு மூப்பு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களின் தேர்வை சரிபார்த்துக்கொள்ளலாம்.

                       உங்கள் பெயர் உள்ளதா என அறிய....!  

Thursday, 16 February 2012

தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி-விபரங்கள்



தமிழக பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொறியியல் பாடம் மட்டுமல்லாது பொதுப் பாடங்களிலும் ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். ஆனால் NET தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.


1. பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணி-விளம்பரம்


2.விபர குறிப்பேடு (Prospectus)


3. விரிவுரையாளர் தேர்வு- பாடத்திட்டம்

பதிவு மூப்பு ஆசிரியர் சங்க போராட்டம்-தினகரன்


Tuesday, 14 February 2012

AEEO - தேர்வு தேதி மீண்டும் மாற்றம்

AEEO - தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 19-02-2012 அன்று தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மாற்றம் செய்யப்பட்டு 26-02-2012 அன்று நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 உங்களுக்கான தேர்வு மையம் தொடர்பான தகவல்களைத் தாங்கிய ஹால்டிக்கெட் இந்த வார இறுதியில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தேர்வு வாரியம் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. 

AEEO தேர்வுக்கு உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா..?

AEEO தேர்வுக்கு உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என அறிய கீழ்கண்ட இணைப்பில் கிளிக் செய்து உங்களின் விண்ணப்ப எண்-யை அளிக்கவும். உங்களின் பெயர் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது.
     
         AEEO தேர்வுக்கு உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா..?