தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் தகவல்கள், அறிவிப்புகள், ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் முடிவுகள், பத்திரிக்கை செய்திகள், கருத்துக்கள் இப்படி ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களையும் ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சியே இந்த வலைப்பூ...
Wednesday, 15 February 2012
AEEO - தேர்வு எழுத தகுதி பெற்றோர் எண்ணிக்கை பாட வாரியாக..!
பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரி தேர்வு வாரியம் முற்றுகை 500 பட்டதாரி ஆசிரியர் கைது
சென்னை : பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வு வாரியத்தை முற்றுகையிட்ட 500 பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி வேலை வாய்ப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். 500-க்கும் அதிகமான ஆசிரியர்கள், திடீரென தேர்வு வாரிய அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முற்றுகை போராட்டம் குறித்து, பதிவு மூப்பு பட்டதாரிகள் சங்க தலைவர் ரத்தின குமார் கூறுகையில், ‘‘வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஏராளமானோர் காத்திருக்கின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். இதுகுறித்து அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. பதிவு செய்துள்ள பட்டதாரிகள் 40 வயதை கடந்து விட்டனர். அவர்களால் போட்டி தேர்வு எழுத முடியாது. போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும். 2010-ல் சான்று சரிபார்க்கப்பட்டவர்களில் 8,100 பேருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். மானிய கோரிக்கையில் அறிவித்தபடி 15 ஆயிரம் ஆசிரியர்களை இந்த கல்வி ஆண்டிலேயே பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்’’ என்றார்.
2 comments:
பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரி தேர்வு வாரியம் முற்றுகை 500 பட்டதாரி ஆசிரியர் கைது
சென்னை : பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வு வாரியத்தை முற்றுகையிட்ட 500 பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி வேலை வாய்ப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். 500-க்கும் அதிகமான ஆசிரியர்கள், திடீரென தேர்வு வாரிய அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முற்றுகை போராட்டம் குறித்து, பதிவு மூப்பு பட்டதாரிகள் சங்க தலைவர் ரத்தின குமார் கூறுகையில், ‘‘வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஏராளமானோர் காத்திருக்கின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். இதுகுறித்து அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. பதிவு செய்துள்ள பட்டதாரிகள் 40 வயதை கடந்து விட்டனர். அவர்களால் போட்டி தேர்வு எழுத முடியாது. போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும். 2010-ல் சான்று சரிபார்க்கப்பட்டவர்களில் 8,100 பேருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். மானிய கோரிக்கையில் அறிவித்தபடி 15 ஆயிரம் ஆசிரியர்களை இந்த கல்வி ஆண்டிலேயே பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்’’ என்றார்.
plese GIVE ME correct webSITE. nameS OR GUIDE to receive qUESTION and ansWER for TNTET PAPER I AND II.9994899221
Post a Comment