ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Sunday 11 November 2012

உண்மையில் ஆசிரியர் பணி காலியிடங்கள் எவ்வளவு..? ஓர் ஆய்வு..!!

 BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்= 18932

இது முதலில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டபோது செய்தித் தாள்களில் வந்த காலிப் பணியிட விபரமாகும். 

ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 1:40 என்ற மாணவர் விகிதத்தில் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதற்கேற்றாற்போல் பணிநிரவலும் செய்யப்பட்டு அதன் பிறகு காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 6872 மட்டுமே..!! அதுவும் பாட வாரியான காலிப்பணியிட விபரமும் அதில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்- 450
ஆங்கிலம் - 3000
கணிதம் - 50
அறிவியல் - 500
சமூக அறிவியல் - 2872
மொத்தம் - 6872...


தொடக்கக் கல்வித் துறையைப் பொருத்தமட்டில் பதவி உயர்வு மூலம் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டமையால் மொத்த காலிப் பணியிடங்கள் 1000 - யைத் தாண்ட வாய்ப்பில்லை எனத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 


அதுவும் சேலம் போன்ற தகுதித் தேர்வில் மிக அதிகமான தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்  காலிப்பணியிடம் 10-கும் குறைவுதான்.

ஆக எப்படிப் பார்த்தாலும் பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் 8000 வரையே இருக்கக்கூடும்.. 18932 என்பதெல்லாம் ஒருவேளை ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 எனப் போட்டால் சாத்தியமாகக் கூடும். ஆனால் இதுவரை இதற்கான கணக்கீட்டுப் பணியை துறை ரீதியாக அரசு இன்னும் செய்யவில்லை என்பதே உண்மை...!!


அதுவும் இந்த கடைசித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் ஆங்கிலம் மட்டுமே 3000 பேரைத்நெருங்கி இருப்பதாகத் தெரிகிறது. ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர்களைத் தவிர மற்ற பாடத்தில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா...? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!!  

1 comment:

Unknown said...

நண்பர்களே... நன்றாக‌ படித்து தகுதி தேர்வு எழுதி வெற்றிபெறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை... ஆட்சி மாற்றத்தால் தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று பகல் கனவு காணதிற்கள்... தகுதி தேர்வை கொண்டு வந்ததே, மத்தியை ஆளும் காங்கிரஸ் கட்சியும், அதற்கு ஆதரவு தரும் தி.மு.க கட்சியும் தான், என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். இதனால் தான் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க எந்த அறிவிப்பும் வெளியீடவில்லை.... அது மட்டும் அல்ல தகுதி தேர்வை ரத்து செய்யவும் முடியாது... (எ.கா. TNPSC Exam.,) நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தகுதி தேர்விற்கான தகுதி மதிப்பெண்னை 40%மாக மாற்ற போரட வேண்டும்.... நாம் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வை வெற்றிபெற வேண்டும்.....

Post a Comment